Tuesday, July 19, 2011
தெலுங்கில் நடித்த "ஸ்ரீராம ராஜ்யம்" படத்துடன் சினிமாவை விட்டு விடை பெறுவதாக வந்த செய்தியை நடிகை நயன்தாரா மறுத்துள்ளார். ரமலத்துக்கும், பிரபுதேவாவுக்கும் விவாகரத்து கிடைத்து விட்டதால், விரைவில் நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்ய இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு நயன்தாரா நடிக்க மாட்டார் என்றும், கடைசியாக தெலுங்கில் நடித்த "ஸ்ரீராம ராஜ்யம்" படத்தில் சீதா தேவி கேரக்டருடன் அவர் சினிமாவை விட்டு விலகுவதாகவும் செய்திகள் வந்தது. ஸ்ரீராம ராஜ்யம் படத்தின் கடைசி நாள் சூட்டிங்கில் மலர் தூவி நயன்தாராவுக்கு விடை கொடுத்தனர். அப்போது கண்ணீர் மல்க அனைவரிடமிருந்து விடைபெற்றார். இந்நிலையில் சினிமாவை விட்டு விலகப்போவதாக நான் என்றுமே கூறியதில்லை என்று நயன்தாரா கூறியுள்ளார்.