
சமீபத்தில் நடந்த பட இசை வெளியீட்டு விழாவின் போது ஜெயம் ரவி, ஜீவா நடித்த படங்களின் ஓடியோ ரிலீஸ் விழாவை குடும்ப திருவிழாவாக கருதி நான் கலந்து கொள்வேன் அந்த அளவுக்கு ஜீவாவும் நானும் நெருக்கமான நண்பர்கள். என் செல்ல மகனின் பிறந்த நாள் விழாவை சமீபத்தில் கொண்டாடினோம். அதில் ஜீவா ஆர்ப்பாட்டமாக கலந்து கொள்வார் என எதிர்பார்த்தேன். விழாவில் ஜீவாவால் கலந்து கொள்ள முடியாமல் போனது. ஆனால் பிறந்த நாள் விழாவிற்கு அவருடைய மனைவி குழந்தை இருவரையும் அனுப்பி வைத்தார். நண்பன் ஜீவா என் மேல் அளவு கடந்த அன்பும்,பாசமும் வைத்திருப்பதை அப்போது அறிந்து நெகிழ்ந்து போனேன். சினிமா உலகில் ஜீவா மற்ற நாயகர்களுடன் இயல்பாகவே நட்புணர்வோடு பழகும் ஹீரோ என்பதை அனைவரும் அறிவார்கள். நண்பன் படத்தில் இணைந்து நடித்ததின் மூலம் இளைய தளபதி விஜய்க்கும் ஜீவா நண்பனாகிவிட்டார் என்று கூறியுள்ளாராம். |