Thursday, 21 July 2011
எப்போது துவங்கினாலும் “ராணா” படத்துக்கு கால்ஷீட் கொடுப்பேன்: தீபிகா படுகோனே பேட்டி.
Thursday, July 21, 2011
நான் பெங்களூரை சேர்ந்தவள். மாடலிங் செய்தபோதே தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனால் இந்திப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினேன். அங்கு பிசியாக இருப்பதால் பிற மொழிப் படங்களை ஏற்கவில்லை.
ரஜினியுடன் “ராணா” படத்தில் நடிப்பதன் மூலம் தமிழுக்கு வந்துள்ளேன். அவருடன் நடிப்பதற்காக சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்தேன். என்னை சந்திப்பவர்களெல்லாம் “ராணா” படம் எப்போது துவங்கும் என்று தான் கேட்கிறார்கள். ரஜினி ஆரோக்கியம் தான் முக்கியம். அதன் பிறகு தான் ராணா படம்.
ராணா படப்பிடிப்பு குழுவினர் ரஜினிக்காக காத்திருப்பதில் தவறு இல்லை. “ராணா” என்பது எனக்கு முக்கியமான படம். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களுக்கு பிறகு எப்போது வேண்டுமானாலும் மற்ற படங்களை சமாளித்துக் கொண்டு ராணா படத்துக்காக கால்ஷீட் ஒதுக்கித் தர தயாராகி இருக்கிறேன். இதனை ரஜினி குடும்பத்தினரிடம் தெரிவித்து விட்டேன்.
நான் ரஜினி சாரின் தீவிர ரசிகை. அவர் பெரிய சாதனையாளர். ராணாவுக்காக என்னால் இயன்ற ஒத்துழைப்பை தருவேன். அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் இறங்கி வர தயாராக இருக்கிறேன். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், எனக்கும் நல்ல நட்பு உள்ளது. சவுந்தர்யாதான் எனது தயாரிப்பாளர் ஆரம்பத்தில் சாதாரணமாகத்தான் அறிமுகமானோம். இப்போது நெருங்கிய, நண்பர்கள் ஆகிவிட்டோம்.