Saturday, June 11, 2011
தம்பி கார்த்திக்கின் ஜோடியாக நான் மகான் அல்ல படத்தில் நடித்த காஜல் அகர்வால், இப்போது சூர்யாவின் புதிய ஜோடியாகியிருக்கிறார். கோ' படத்துக்குப் பின் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் 'மாற்றான்'. இதில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'ஏழாம் அறிவு' படத்துக்குப் பின் அவர் நடிக்கும் படம் இது.
சூர்யாவின் ஜோடியாக நடிக்க பல புதுமுகங்களை பரிசீலித்தார் கே.வி.ஆனந்த். அனுஷ்கா, தமன்னா, மேக்னா ராஜ், அமலாபால் என பலரிடமும் பேச்சு நடந்தது. இறுதியில் காஜல் அகர்வாலுக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளது.
பாலிவுட்டுக்கு சென்றுவிடும் முடிவில் இருந்த காஜலுக்கு இது நல்ல வாய்ப்பாகத் தெரிந்ததால், இப்போதைக்கு மும்பை செல்லும் முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். சமீபத்தில்தான் காஜலுக்கு கதை சொன்னார் இயக்குநர் ஆனந்த். கதையும் அதில் தனது பாத்திரமும் சிறப்பாக உள்ளதாக காஜல் திருப்தி வெளியிட்டுள்ளார்.