Saturday, June 11, 2011
ஆரம்பத்தில் குடும்பபாங்கான கேரக்டரில் நடித்து, பின்னர் அதிரடியாக கவர்ச்சியில் இறங்கிய பத்மப்ரியாவுக்கு தமிழ் கை கொடுக்கவில்லை என்றாலும் மலையாளத்தில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் சீனியர்ஸ் என்ற படத்தில் ஜெயராமுடன் இணைந்து நடித்தார். நகைச்சுவை காட்சிகளுடன் சஸ்பென்ஸ் திரைப்படமாக வெளிவந்த இப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் பத்மப்ரியா. படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றிருக்கிறார்.
இந்தபடத்தில் கிடைத்த வெற்றி அடுத்து மோகன்லாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இளையராஜாவின் இசையில், வருகிற 15ம் தேதி இப்படத்தின் சூட்டிங் தொடங்க இருக்கிறது. தமிழில் இதுவரை தனக்கு பிடித்த மாதிரி கதை ஏதும் அமையாததால் நடிக்கவில்லை என்று கூறும் பத்மப்ரியா, நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைந்தால் நிச்சயம் தமிழிலும் நடிப்பேன் இல்லையென்றால் இப்போதைக்கு மலையாளமே போதும் என்று கூறுகிறார்.