கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு... என்று மாளவிகா பாட்டு பாடியதுபோல, நடிகை இலியானா செருப்புதான் எனக்கு புடிச்ச பொருளு... என்று பாடினாலும் பாடுவார் போலிருக்கிறது. "கேடி" படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானாலும், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாததால் ஆந்திரா பக்கம் போனார். தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் நாயகி என்ற பெயருடன் வலம் வரும் அம்மணிக்கு தமிழ் சினிமா மீது தொடர்ந்து பற்றுதல் இருந்து வந்ததால், தற்போது நண்பன் படத்தில் நடித்து வருகிறார்.
இலியானாவிடம் உங்களுக்கு பிடித்த பொருள் எது என்று கேட்டால், சட்டென கீழே குனிந்து செருப்பை கழற்றுகிறாராம். காரணம், அம்மணிக்கு செருப்பு என்றால் ரொம்ப பிடிக்குமாம். விதவிதமான செருப்புகள் அணிவதில் ஆர்வம் கொண்ட இலியானா, அழகான செருப்புகளை பார்த்து விட்டால், அதனை வாங்காமல் வீடு திரும்ப மாட்டாராம். நூற்றுக்கணக்கான ஜோடி செருப்புகளை வீட்டில் சேகரித்து வைத்திருக்கும் இலியானா, சமீபத்தில் நண்பன் சூட்டிங்கிற்காக ஸ்பெயின் சென்றபோது கூட விலை உயர்ந்த செருப்புகளை வாங்கி வந்திருக்கிறார்.