என் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரம் இந்தப் படத்தில் இல்லை என பாலிவுட் மீடியாக்களில் சொன்னார். இந்த கருத்துக்கு தயாரிப்பு தரப்பு கோபமானது. இப்பிரச்னையை பேசி தீர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து படத்திலிருந்து விலகி விட்டார் ஜெனிலியா. இப்படத்தில் அசினும் நடிப்பதால் அவருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனது வேடத்தை மாற்றி அமைக்குமாறு ஜெனிலியா கூறி வந்தாராம். இப்பிரச்னையால்தான் அவர் படத்திலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. |