Saturday, July 16, 2011
அசல் படத்திற்கு பிறகு தமிழ்ப்பட வாய்ப்பு இல்லாமல் கரையதுங்கி நிற்பவர் நடிகை பாவனா. கவர்ச்சி காட்டுவதில்லை என்ற கொள்கை முடிவுடன் சினிமாவுக்கும் வந்த நடிகைகளில் மிக முக்கியமானவராக கருதப்பட்ட பாவனா, சில படங்களில், சில காட்சிகளில் லேசாக கவர்ச்சி காட்டினார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடிக்கிறேன். மலையாளத்தில் இமேஜ் பற்றிக் கவலை கிடையாது. நல்ல படங்கள் அமைந்தால் கவனம் செலுத்துகிறேன். கோலிவுட், டோலிவுட்டிலும் ஹீரோக்களுக்கு இமேஜ் முக்கியம். அதேபோல் நடிகைகளுக்கும் இமேஜ் தேவைப்படுகிறது. நடிகையான பின் நான் எடுத்த முதல் முடிவு கிளாமராக நடிக்கக் கூடாது என்பதுதான். ஆனால் சில படங்களுக்காக அந்த விஷயத்தை விட்டுக் கொடுக்க வேண்டியாதாகி விட்டது. கிளாமரைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் ஆபாசமாக நடிக்கவில்லை. தமிழ், தெலுங்கில் கிளாமராக நடித்ததால் கிளாமர் இமேஜ் இருந்தது. மலையாள படங்களில் அப்படியில்லை, என்று கூறியுள்ளார்.