அப்போது பட்ட கஷ்டங்கள் எல்லாம் என் மனதை வலுப்படுத்தியுள்ளது என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
செல்வராகவனை விவாகரத்து செய்து பின்னர் மிகுந்த உற்சாகத்தோடு, மீண்டும் தனது சினிமா பயணத்தை தொடர்ந்து இருக்கிறார் சோனியா அகர்வால். முன்பைவிட உடம்பை குறைத்து, மீண்டும் ஹீரோயினாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தற்போது தமிழில் "ஒரு நடிகையின் வாக்குமூலம்", "மாதா பிதா குரு" உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தினமும் ஷூட்டிங், விசேஷங்களில் பார்ட்டி, நண்பர்களுடன் விருந்துகள் என நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார் சோனியா அகர்வால். இந்நிலையில் இருதினங்களுக்கு முன்னர் தனது தாயின் பிறந்தநாளை ஒரு பெரிய பார்ட்டியாக கொண்டாடி இருக்கிறார் சோனியா. இந்த பார்ட்டிக்கு நண்பர்கள் அனைவரையும் அழைத்து விருந்து வைத்து, அவர்களுடன் நிறைய விஷயங்களை மனம்விட்டு பகிர்ந்து கொண்டார். அப்போது தனது நண்பர்களிடம் கூறுகையில், முன்பை விட நான் இப்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டுவிட்டேன். முன்பை விட இப்போது நல்ல கேரக்டர்கள் வருகின்றன தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். இளம் வயதிலேயே நிறைய பிரச்சினைகளைப் பார்த்துவிட்டேன். என்னை இன்னும் உறுதியாக்க இந்த சோதனைகள் உதவியிருக்கின்றன. கடவுள் என்னோடு இருப்பதாக உணர்கிறேன் என்றார். |