பிரபுதேவாவுக்காக மதம் மாற முடியாது என்று அவரது காதலியும், நடிகையுமான நயன்தாரா கூறிவிட்டாராம். இதனால் அவர்களது திருமணத்தில் சிறிய சிக்கல் இருந்தாலும் அதனை சமாளிக்கும் திட்டத்துடன் கல்யாண வேலைகளில் களம்இறங்கியிருக்கிறார் பிரபுதேவா. 1996ம் ஆண்டு முஸ்லிம் பெண்ணான ரம்லத்தை காதலித்து திருமணம் செய்தார் பிரபுதேவா. திருமணத்தின்போது பிரபுதேவாவுக்காக இந்துவாக மாறினார் ரமலத். காதல் கணவருக்காக மதம் மாறிய ரமலத்தை விட்டு விட்டு, நயன்தாராவுடன் திருமணம் செய்யாமலேயே சிறந்த தம்பதி விருது பெறும் அளவுக்கு வாழ்ந்து வருகிறார் பிரபுதேவா.
இதற்கிடையில் ரமலத்துக்கு கொடுக்க வேண்டிய செட்டில்மெண்ட்டை கொடுத்து விவாகரத்துக்கு சம்மதம் வாங்கிய பிரபுதேவா, விவாகரத்து தேதிக்காக காத்திருக்கிறார். முறைப்படி விவாகரத்து கிடைத்ததும் நயன்தாராவை திருமணம் செய்யவிருக்கிறார் அவர். இந்நிலையில் கிறிஸ்தவ பெண்ணான நயன்தாரா, திருமணத்துக்கு முன்பு இந்துவாக மாற வேண்டும் என்று பிரபுதேவா வீட்டை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்களாம். ஆனால் நயன்தாராவோ கல்யாணத்துக்காக மதமெல்லாம் மாற முடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம்.இதனால் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு, திருமணத்துக்கு சிக்கல் வந்து விட்டால் விபரீதமாகி விடும் என்பதை உணர்ந்த பிரபுதேவா, நயன்தாரா வழிக்கே சென்று, கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றிக் கொண்டு, இந்து முறைப்படி தாலி கட்டிக் கொள்ளலாம் என்று கூறி விட்டாராம். நயன்தாராவும் அதற்கு சம்மதித்து விட்டதால் தங்கள் திருமணத்தில் எந்த சிக்கலும் இல்லை என்று கல்யாண வேலைகளில் முழு மூச்சுடன் இறங்கியிருக்கிறது காதல் ஜோடி.