
சுறா, தில்லாலங்கடி போன்ற பல படங்களில் நடித்த தமனா தற்போது கமல்ஹாஸனுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறாராம்.

இப்போது பெரிய நடிகர்களின் விருப்பமான நாயகியாக மாறிவிட்டார். பரத், ஜெயம் ரவி, விஜய் என அவரது ஆட்டம் களைகட்டிவிட்டது.
இந்த நிலையில், அவருக்கு கமலுடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம். கேஎஸ் ரவிக்குமார் இயக்கவிருக்கும் கமலின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம் தமன்னா.
கமல் படமாச்சே முத்தக் காட்சி இருக்குமா என்று தமன்னா கேட்க, அது இல்லாமலா என்று பதில் வந்ததாம்.
அப்படின்னா என் வேறு என்ற ரீதியில் பேசிய தமன்னா, ரூ.1.25 கோடியை சம்பளமாகக் கேட்க, இவ்வளவு சம்பளம் கேட்கும் நடிகை தேவையா என யோசித்து வருகிறாராம் ரவிக்குமார்.
தமன்னா கைவசம் பல படங்களை வைத்துள்ளார். அவை தெலுங்கில் ‘பத்ரிநாத்’, ஹரி இயக்கும் படத்தில் தனுஸிற்கு ஜோடியாக, மேலும் கார்த்தியுடனும் நடிக்கவுள்ளார்.