இந்த வாய்ப்பு கிடைத்தமைக்காக இசைப்புயல் ஏகப்பட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்.
இசைப்புயலின் இசையமைப்பு தங்களது படத்தில் அமைந்து விட்டால் சந்தோஷப்படும் இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவ்வளவு புகழ் வாய்ந்த இசைப்புயல், பாலிவுட்டிலுள்ள ஒரு இயக்குநரிடமிருந்து வந்த வாய்ப்பிற்காக ஏ.ஆர்.ரஹ்மான் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
பாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா. இவர் பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் கடைசியாக 2004 ல் "வீர் சாரா" என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் ஷாருக்கானை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார் யாஷ் சோப்ரா. இந்த படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பைத்தான் இசைப்புயல் பெற்றிருக்கிறார். |
|
|