Monday, 27 June 2011
25 வயதுக்கு உட்பட்டோர் மது குடிப்பதை ஆதரிப்பதா?: நடிகை ஸ்ரேயாவுக்கு எதிர்ப்பு.
Monday, June 27, 2011
மராட்டிய மாநிலத்தில் 25 வயதுக்கு உட்பட்டோர் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவர்கள் மதுக்கடைகளில் மது வாங்கவும் அனுமதிக்கப்படவில்லை. இச்சட்டத்தை நடிகை ஸ்ரேயா விமர்சித்ததாக செய்திகள் வந்தன.
18 வயது உடையவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஓட்டு போடவும் அனுமதி இருக்கிறது. ஆனால் மது அருந்த மட்டும் தடை போடுகிறார்கள் என்று ஸ்ரேயா கண்டித்ததாக கூறப்பட்டது.
ஸ்ரேயா கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இளம் வயதினர் குடிக்கு அடிமையாகி எதிர்காலத்தை பாழடிப்பதை தவிர்க்கவே மராட்டிய அரசு அச்சட்டத்தை கொண்டு வந்தது.
குடிப்பழக்கத்தால் மரணங்கள் அதிகரிக்கின்றன. இதனால் 40 வயதில் விதவையாகும் பெண்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. எனவே சமூக நோக்கோடு கொண்டு வரப்பட்ட சட்டத்தை ஸ்ரேயா விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
இதுபற்றி ஸ்ரேயாவிடம் கேட்டபோது மது குடிப்பதை ஆதரித்து நான் பேசவில்லை என மறுத்தார்.