Monday, 27 June 2011
“ராணா” படத்தில் சண்டைக் காட்சிகளில் ரஜினிக்கு “டூப்”: டாக்டர்கள் அறிவுரை.
Monday, June 27, 2011
ரஜினி பூரண குணமடைந்துள்ளதால் ராணா பட வேலைகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. ரஜினி சென்னை திரும்பியதும் படப்பிடிப்புக்கு புறப்பட தயாராகிறார்கள்.
ரஜினி இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிக்கிறார். புராண காலத்து ஆக்ஷன் படமாக இதை எடுக்கின்றனர். எனவே சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும்.
ரஜினி ஒரு மாதம் சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். டயாலிசிஸ் சிகிச்சையும் செய்யப்பட்டது. சிங்கப்பூர் ஆஸ்பத்திரியிலும் அவசர பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் ராணா படத்தில் ரஜினி நடிப்பாரா? என்று சந்தேகங்கள் எழுந்தன.
ஆனால் திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடக்கும் என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறி வந்தார். ரஜினி விரைவில் சென்னை திரும்பி ராணா படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று அறிவித்தார். அவரது மருமகன் தனுசும் ராணா படத்தில் நடிக்க ரஜினி ஆர்வமாக இருக்கிறார் என்று கூறினார்.
எனவே ராணா படத்தில் ரஜினிநடிபப்து உறுதியாகியுள்ளது. அதே வேளை அப்படத்தில் சண்டைக் காட்சிகளில் “டூப்”பை பயன்படுத்தும்படி டாக்டர்கள் அறிவுரை கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பழைய மாதிரி உடலை வருத்தி சண்டை போட வேண்டாம் என்று கூறியுள்ளார்களாம்.
இதுகுறித்து ராணா படக்குழுவை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கூறும்போது, சண்டைக்காட்சிகளில் டூப் போடுவது எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் இருந்தே இருக்கிறது. ஆபத்தான சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் நடித்து ஹீரோக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் படப்பிடிப்பு ரத்தாகி, தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும் என எம்.ஜி.ஆரே ஒரு முறை ரஜினிக்கு அறிவுரை கூறியுள்ளார்.
“எந்திரன்”, “சிவாஜி” படங்களில்கூட டூப்கள் பயன்படுத்தப்பட்டனர். எனவே ராணாவில் டூப் வைப்பது இயற்கையானதுதான் என்றார்.