
Saturday, June 25, 2011

நடிகர் கார்த்தி, இயக்குனர் செல்வராகவன் திருமணத்துக்கு நடிகர், நடிகைகள் திரள்வதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது. இரு திருமணங்களும் வருகிற 3-ந்தேதி நடக்கிறது.
கார்த்தி ஈரோட்டை சேர்ந்த சின்னசாமி ஜோதி மீனாட்சி தம்பதி மகள் ஸ்ரீரஞ்சனியை மணக்கிறார். இவர்கள் திருமணம் கோவை கொடிசியா அரங்கில் நடக்கிறது. இதற்காக நடிகர், நடிகைகள், உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.
சூர்யா திருமணத்துக்கு குறைவானவர்களே அழைக்கப்பட்டனர். ஆனால் கார்த்தி திருமணத்துக்கு நிறைய பேரை அழைக்கிறார்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள லீராயல் மெரிடியன் ஓட்டலில் 7ந்தேதி இரவு 7 மணிக்கு நடக்கிறது.
செல்வராகவன் தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை அதே நாளில் மணக்கிறார். கார்த்தி திருமணமும் அதே நாளில் நடப்பதால் செல்வராகவன் திருமணத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அவரது தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா தெரிவித்தார்.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை திருமணத்துக்கு அழைத்து இருக்கிறோம். செல்வாவுக்கு சினிமா வேலைகள் இருப்பதால் உடனடியாக தேனிலவுக்கு செல்லும் திட்டம் இல்லை என்றும் அவர் கூறினார். இரு திருமணங்களிலும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். வெளியூர் படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு இத்திருமணங்களுக்கு வருகிறார்கள்.