Saturday, June 25, 2011
மலையாள படத்தில் பிருத்வி ராஜூடன் நடிக்கவில்லை என்றார் அமலா பால். மலையாளத்தில், பிருத்விராஜ் ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘ மலையாளத்தில் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க கேட்டது உண்மை. அந்தப் படத்துக்கு கேட்ட தேதிகள் என்னிடம் இல்லை. எனவே, அப்படத்தில் இருந்து விலகி விட்டேன். தெலுங்கு, கன்னடத்திலும் வாய்ப்புகள் வருகிறது. தமிழ் படங்களில் நடிக்கவே முக்கியத்துவம் தருக்கிறேன்’ என்றார்.