ஒரு படம் ஓட வேண்டும் என்றால் ஹீரோயிசம், இசை, பாடல், காமெடி என எல்லாம கலந்த கலவை இருக்க வேண்டும். அதிலும் காமெடி அதிகமாக இருந்தால் பிற விஷயங்கள் குறைவாக இருந்தாலும் அப்படம் ஹிட்டாகிவிடும். அதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம்.
நாம் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல. காமெடி நடிகர்களான வடிவேலு, விவேக், கருணாஸ் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது கஞ்சா கருப்பும் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ஆனால் தற்போது காமெடியில் கலக்கி வரும் சந்தானம் மட்டும் இந்த விஷயத்தில் மிகவும் உஷாராக இருக்கிறாராம்.இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு; காமெடியன்களில் நாம்பர் ஒன் காமெடியன் ஆவதையே விரும்புகிறேன். அதற்காகவே முழுவீச்சில் இறங்கியுள்ளேன். ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டு, இருக்கிற மரியாதையை கெடுத்துக் கொள்ள மாட்டேன்... என்றார்.