உலகெங்கிலும் தமிழ் திரைப்படங்களுக்கு வரவேற்பு கூடிக்கொண்டே போகிறது. கனடா, நார்வே உள்ளிட்ட நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் தமிழ்திரைப்படங்கள் மட்டுமே பங்கு பெறும் ஃபிலிம் பெஸ்டிவெல் நடைபெற இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 15 முதல் 17ம் தேதி வரை மூன்று நாட்கள் ரஷ்யாவில் உள்ள உக்ளிச் நகரில் நடைபெற இருக்கும் இந்த தமிழ் திரைப்பட விழாவில், "அங்காடித்தெரு", "பாஸ் என்கிற பாஸ்கரன்", "களவாணி", "மதராசபட்டினம்", "மைனா", "நந்தலாலா", "பையா", "தென்மேற்குப் பருவக்காற்று", "விண்ணைத்தாண்டி வருவாயா" உள்ளிட்ட 11 தமிழ் படங்கள் ரஷ்ய மொழியில் சப்-டைட்டில் போடப்பட்டு அங்குள்ள திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளன.
இதுதொடர்பாக சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற பிரஸ் மீட்டில், இந்தியாவுக்கான ரஷ்ய தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு சிறபித்தனர். நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான அருண்பாண்டியனும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழ்திரையுலகிற்கும் - ரஷ்யாவுக்குமான தொடர்புகளை வரிசைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.