ரஜினி தற்போது உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம் பெற வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள், பல பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள். நிலைமை இவ்வாறு இருக்க இயக்குனர் ராம் கோபால் வர்மா போகிற போக்கில் ரஜினியை வாரியிருப்பது, ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ராம் கோபால் வர்மாவுக்கு யார் மீதாவது கோபம் இருந்தால், சம்பந்தமில்லாமல் ஏதாவது விசயத்தில் தனிமனித தாக்குதல் நடத்துவார் என்பது ஊரந்த விசயம். யோகா குரு உண்ணாவிரதம் இருப்பது பற்றி கமெண்ட் அடித்திருக்கும் ராம் கோபால் வர்மா ஷாருக், ரஜினி போன்றவர்கள் டயட் என்ற பெயரில் சாப்பிடாமல் இருப்பதற்கு இது போன்ற உண்ணாவிரதம் இருக்கலாம், என்று கூறி இருக்கிறார். ரஜினிக்கு உடல்நலமில்லாமல் இருப்பது கூட இவருக்கு தெரியாதா என்ன? இதனால் லட்சக்கனக்கன ரஜினி ரசிகர்களும் இவர்மீது கடுப்படைந்துள்ளார்கள்