அவரது உதவியாளர் எம்.சரவணன் இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குனர் சரவணன் கூறியது, ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அவர் தான் இப்படத்தை தயாரிக்கிறார். ஆக்ஷன் கலந்த அவரது பாணியிலிருந்து இப்படம் மாறுபட்டிருக்கும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 2 ஜோடிகளின் காதல் கதை தான் இப்படம். இறுதி காட்சியில் இரு ஜோடிகளும் இணைவது மாதிரியான திரைக்கதை. சென்னை காதல் ஜோடியாக ஷர்வானந்த் - அனன்யா, திருச்சி காதல் ஜோடியாக ஜெய் - அஞ்சலி. இரு நாயகிகள் நடிப்பதால் அவர்களுக்குள் ஈகோ வரலாம் என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள். இந்தப் படத்தில் அப்படி இல்லை. அஞ்சலியும், அனன்யாவும் இணைந்து நடிக்கும் காட்சிகள் இல்லை. இக்கதையில் வில்லன் என்று சொல்ல ஒரு நெகடிவ் பாத்திரம் கூட கிடையாது. எல்லாமே பாசிடிவ் கதாபாத்திரங்கள். ஆனால் திருப்பமும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது. விறுவிறுப்புக்கு நெகட்டிவ் கதாபாத்திரங்கள் தேவை இல்லை என்பதை இப்படம் புரிய வைக்கும். இப்படத்தின் நடிகர், நடிகை மற்றும் கதைக்கு எவ்வளவு பட்ஜெட் ஆகும் என்று முருகதாஸ் கேட்டார். நான் சொன்ன பட்ஜெட்டை வெளியிலிருந்து கேட்டவர்கள், இந்த ஸ்டார் காஸ்ட்டுக்கு இது இரு மடங்கு அதிக பட்ஜெட் என்றனர். ஆனால், கதைப்படி நீங்கள் சொன்ன பட்ஜெட் சரி தான். சொன்னபடி படத்தை எடுத்தால் நிச்சயம் நன்றாக இருக்கும் என்றார் முருகதாஸ். அதன்படி செலவும் செய்தார். இப்போது 90 சதவீதம் படம் முடிந்துவிட்டது. அதைப் பார்த்து திருப்தி தெரிவித்தார் முருகதாஸ். படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர இருக்கிறேன் என்றார். |