Tuesday, June 14, 2011
விஸ்வரூபம் படத்தை இந்தா ஆரம்பிக்கிறேன், அந்தா ஆரம்பிக்கிறேன் என்று கிட்டத்தட்ட 1 மாதத்திற்கும் மேலாக என்னுடைய கால்ஷீட்டை வீணடித்துவிட்டார் என்று புலம்பி வருகிறார் பாலிவுட்டின் பிரபல நடிகை சோக்ஷி சின்ஹா.
பாலிவுட்டின் முன்னாள் நாயகர் சத்ரூகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா. பாலிவுட்டின் பிரபல நடிகையான இவர் கமல்ஹாசன் நடிக்கும் விஸ்வரூபம் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். விஸ்வரூபம் படத்திற்காக கடந்த மே மாதம் முதல் தன்னுடைய கால்ஷீட்டை கொடுத்து இருந்தார். ஆனால் இடையே டைரக்டர் செல்வாராகவன் மற்றும் கமலுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், இந்தபடத்தில் செல்வா அதிரடியாக தூக்கப்பட்டார். மேலும் நடிப்புடன் டைரக்ஷன் பொறுப்பையும் கமலே ஏற்றார். இதனால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இப்போது இந்த பிரச்சனை எல்லாம் முடிந்தும் இன்னும் படம் ஆரம்பிக்கவில்லை. ஜூன் 5ம் தேதி லண்டன் சூட்டிங் நடக்க இருப்பதாக சோனாக்ஷிக்கு தவல் கொடுத்துள்ளனர். ஆனால் இப்போது வரை லண்டன் போவது பற்றி எந்த பதிலும் சோனாக்ஷிக்கு வரவில்லையாம்.
இதனால் ரொம்பவே நொந்து போயிருக்கும் சோனாக்ஷி, கமல் படமாச்சே, நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று, தமிழில் நடிக்க கால்ஷீட் கொடுத்தேன். இந்திபடத்தை ஒதுக்கி விட்டு இந்தபடத்தில் நடிக்க இருந்தேன். ஆனால் இன்று வரை படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கவில்லை. இதுகுறித்து ஒரு தகவலும் படக்குழுவினரிடமிருந்து வரவில்லை. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக என்னுடைய கால்ஷீட்டை வீணடித்துவிட்டனர். இதனால் என்ன செய்வதென்றே புரியவில்லை என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார். பாவம் சோனாக்ஷி!!