Saturday, June 18, 2011
தி பிலிம் கம்பெனி சார்பில் டி.டி.பிரதாபன், எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம், ‘மல்லுக்கட்டு’. தனுஷின் சித்தப்பா மகன் வருண் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஜோடி, ஹனிரோஸ். மற்றும் பரத் ரெட்டி, சபேஷ் கார்த்திக், செவ்வாழை, சாதிகா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சி.பிரேம்குமார். இசை, தாஜ்நூர். பாடல்கள்: வாலி, கபிலன், சினேகன், ஆண்டாள் பிரியதர்ஷினி. த.முருகானந்தம் இயக்குகிறார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்களது திறமைகளை, அடையாளங்களை பதிய வைக்கவும் மற்றும் எண்ணங்களை, லட்சியங்களை செயல்படுத்தவும் கடுமையாகப் போராடுகின்றனர். போராட்டம் என்பதன் இன்னொரு அர்த்தம், மல்லுக்கட்டு. காதலுக்காக, அதனுடைய வெற்றிக்காகப் போராடும் இளைஞனின் கதையாக இப்படம் உருவாகிறது.