Saturday, 9 July 2011
இலங்கையில் படப்பிடிப்புக்கு செல்லும் தமன்னாவுக்கு எதிர்ப்பு:இந்து மக்கள் கட்சி
Saturday, July 09, 2011
நடிகை தமன்னாவுக்கு தமிழில் புதுப்படங்கள் இல்லை. “வேங்கை”தான் கடைசி படம். இதுபற்றி தமன்னா கூறியதாவது:-
தெலுங்கில் பிசியாக நடிக்கிறேன். அங்கு இவ்வருடத்தில் நடிக்க மட்டும் மூன்று படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளேன். அதனால்தான் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. அடுத்த வருடம் மீண்டும் தமிழுக்கு வருவேன்.
“வேங்கை”யில் எனது நடிப்பை நிறைய பேர் பாராட்டுகிறார்கள். இப்படத்தில் நடித்தது சந்தோஷமான அனுபவமாக இருந்தது.
தெலுங்கில் சரணுடன் நடிக்கும் படத்தின் படப் பிடிப்பு இலங்கையில் நடக்க உள்ளது. அங்குள்ள காடுகளில் படப்பிடிப்பு நடத்துகின்றனர். இதற்காக நான் இலங்கை செல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் தமன்னா இலங்கை செல்ல எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஈழத்தமிழர்களை படுகொலை செய்யப்பட்ட இலங்கைக்கு தமன்னா போகக்கூடாது என்று இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பி.ஆர். குமார் கண்டித்துள்ளார்.