Saturday, 9 July 2011
“ராணா” படப்பிடிப்பு விரைவில் துவங்கும்: ரஜினியுடன் நடிக்க காத்திருக்கிறேன்-தீபிகா படுகோனே
Saturday, July 09, 2011
“ராணா” படத்தில் ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கிறார். ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இரு மாதங்களுக்கு முன் துவங்குவதாக இருந்தது. ரஜினிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் படப் பிடிப்பு நிறுத்தப்பட்டது.
தீபிகா படுகோனே, சென்னை வந்து ஒரு நாள் மட்டும் நடித்தார். படப்பிடிப்பு நின்றதால் வருத்தத்தோடு மும்பை திரும்பினார்.
“ராணா” படப் பிடிப்புக்காக வேறு படங்களில் நடிக்காமல் நிறைய நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார். அவற்றை சரியாக பயன்படுத்த முடியாமல் குழப்பம் ஏற்பட்டது. ரஜினி தற்போது குண மடைந்துள்ளதையும் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்ற அறிவிப்பை கேட்டும் தீபிகா சந்தோஷமாகி உள்ளார்.
இதற்கிடையில் தீபிகாவுடன் ரஜினி டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசிஉள்ளார். இது குறித்து தீபிகா கூறியதாவது:-
ரஜினி என்னுடன் பேசி “ராணா” படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றார். அவர் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. ரஜினியுடன் சேர்ந்து நடிக்க காத்து இருக்கிறேன்.