
Saturday, July 09, 2011
விக்ரம், அனுஷ்கா, அமலாபால் நடித்த "தெய்வத் திருமகள்" படம் வருகிற 15-ந்தேதி ரிலீசாகிறது. இப்படம் பற்றி விக்ரம் அளித்த பேட்டி வருமாறு:-
“தெய்வத் திருமகள்” படம் வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்டது. ஐந்து வயது சிறுவன் மனநிலை கொண்ட கேரக்டரில் நான் நடித்துள்ளேன். இதற்காக 12 கிலோ உடல் எடையை குறைத்தேன். மனநலம் பாதித்த சிறுவர்கள் இல்லங்களுக்கு சென்றேன். அவர்கள் நடவடிக்கைகள், பழக்க வழக்கங்களை நேரில் பார்த்து பயிற்சி எடுத்தேன். படம் மன நிறைவாக வந்துள்ளது.
படத்தை என் மகன் பார்த்து பிரமாதமாக இருப்பதாக பாராட்டினான். ஒரு குழந்தை படத்தில் சிறப்பாக நடித்துள்ளது. நிச்சயம் விருது கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திரிஷாதான் உங்களுக்கு பொருத்தமான ஜோடியா? மற்ற நடிகைகள் அவரைப் போல் ஜோடியாக பொருந்தவில்லையோ என்று கேட்டபோது
திரிஷா பொருத்தமான ஜோடிதான் அவரைப் போல் என்னுடன் நடித்த கதாநாயகிகள் எல்லோருமே பொருத்தமானவர்கள்தான். ராவணன் படத்தில் ஐஸ்வர்யாராயும் நானும் சிறப்பாக நடித்து இருந்தோம் என்றார்.
தெய்வத் திருமகள் படத்தின் இயக்குனர் விஜய் கூறும்போது, "தெய்வத் திருமகள்" விருதுக்காக எடுக்கப்பட்ட படம் அல்ல. இது கமர்ஷியல் படம், காமெடியும் இருக்கும் என்றார். அப்போது நடிகை அமலாபால், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் உடன் இருந்தனர்.