Saturday, 9 July 2011
நடிகர் விஷால் இமயமலையில் யோகா, தியானம் பயிற்சி.
Saturday, July 09, 2011
விஷால் நடித்த “அவன் இவன்” படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் ஒன்றரைக்கண் வைத்து கஷ்டப்பட்டு நடித்து இருந்தார். 250 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றார்.
எத்தனை கோடி கொடுத்தாலும் இதுபோன்ற கேரக்டர்களில் இனி நடிக்கவே மாட்டேன் என்று தெரிவித்தார். உடல்வலி, மனவலி எல்லாம் இணைந்து அவரை கஷ்டப்படுத்தியது.
இதையடுத்து இமயமலையில் 10 நாட்கள் ஓய்வு எடுக்க முடிவு செய்து அங்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு தங்கி தியானம், யோகா கற்கிறார். உடலுக்கு முழு புத்துணர்ச்சி அளிக்கும் உடற்பயிற்சிகள், மசாஜ்கள் போன்றவற்றை செய்கிறார்.ஆயுர்வேத சிகிச்சைகளும் எடுத்துக் கொள்கிறார்.
ரஜினி ஏற்கனவே அடிக்கடி இமயமலை சென்று யோகா, தியானங்களில் ஈடுபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.