இந்நிலையில் இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷை, அசின் காதலிப்பதாகவும் இருவரும் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாகவும் மும்பை பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகின. இருவரும் ஓட்டல்களில் அடிக்கடி சந்திப்பதாகவும், வெளியூர்களுக்கு சேர்ந்து பயணிப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. இந்தசெய்தி அசின் காதுக்கு எட்டவே, இனிமேல் என்னுடன் பேச வேண்டாம் என்று நீல் நிதின் முகேஷ்க்கு, அசின் எஸ்.எம்.எஸ்., அனுப்பி விட்டாராம். அசினுடன் பேச நீல் நிதின் முகேஷ் செல்போனில் பலதடவை முயற்சித்தும் அவர் போனை எடுக்கவில்லையாம். இவர்களது பிரிவுக்கு காரணம் தெரியவில்லை. ஒருவேளை இருவரையும் வைத்து காதல் கிசு கிசு ஏற்பட்டதால் பிரிந்திருக்கலாம் என்கிறது இந்தி திரையுலகம். |