Monday, July 25, 2011
வெளிமாநிலங்களில் இருந்து தமிழுக்கு இறக்குமதியான சமீபத்திய நடிகைகள் எல்லாம் சரளமாக தமிழ் பேச, நீண்டகாலமாக தமிழ் சினிமாவில் இருந்து வரும் நடிகை சோனியா அகர்வால் மட்டும் இன்னும் தமிழில் தடுமாறிக் கொண்டு இருக்கிறார். செல்வராகனுடன் விவாகரத்து கிடைத்த பின்னர், சினிமாவில் மீண்டும் கதாநாயகி வேடம் ஏற்றிருக்கும் அம்மணி, புதுமுக நடிகைகளின் போட்டியை சமாளிக்கவும், மீண்டும் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்கவும் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் ஹீரோயின் வேடம் கிடைத்துவிட்டதால், இனி அடிக்கடி தமிழ் சினிமா விழாக்களில் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனால் தீவிரமாக தமிழ் கற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக தினமும் ஒருமணி நேரம் தமிழ் கற்று வருகிறார்.