Tuesday, July 05, 2011
‘அருந்ததி' படத்தில் ஆவியை அழிக்கும் வேடத்தில் நடித்த அனுஷ்கா, பின்னர் கிளாமர் வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தற்போது ‘ராம்பச்சோதாவரம்' என்ற படத்தில் ஆக்ஷன் வேடத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் இப்படம் உருவாகிறது. இது பற்றி தயாரிப்பாளர் கிருஷ்ணமராஜு கூறும்போது, ‘பாரவி இப்படத்தின் ஸ்கிரிப்ட் எழுதி உள்ளார். 1930ல் பிரிட்டிஷாரை எதிர்த்து போராடிய வீரப் பெண்ணைப் பற்றிய கதை. இக்கதையை அனுஷ்காவிடம் கூறியதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். வீரமிக்க இளைஞர்களை தலைமை தாங்கி வழிநடத்தும் கதாபாத்திரம். சைதன்யா டான்டலுரி இயக்கம். மணிசர்மா இசையமைக்கிறார்' என்றார்.