
Friday, July 15, 2011

நடிகை பூமிகாவும் யோகா பயிற்சியாளர் பரத்தாகூரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் செய்திகள் பரவியுள்ளன.
பரத்தாகூர் சமீபத்தில் “தகிட தகிட” என்ற படத்தை தயாரிக்கிறார். இதற்காக பல கோடிகள் செலவு செய்யப்பட்டது. பூமிகா நடித்து சம்பாதித்த பணத்தையெல்லாம் இந்த படத்துக்கு செலவு செய்தார். ஆனால் படம் ஓடவில்லை. சில நாட்களிலேயே தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு விட்டன.
இதனால் பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. பூமிகாவுக்கு பரத்தாகூர் படம் எடுத்தது பிடிக்க வில்லை. சம்பாத்தியம் முழுவதையும் கரைத்து விட்டாரே என ஆதங்கப்பட்டார். இருவருக்கும் அடிக்கடி வாய்த் தகராறுகள் ஏற்பட்டன. எனவே கணவரை பிரிவதற்காக விவாகரத்து கேட்டு மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருப்பதாக கூறப்பட்டது.
இதனை பூமிகா மறுத்தார். அவர் கூறியதாவது:-
எனக்கும் கணவர் பரத்தாகூருக்கும் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. எங்கள் உறவு வலுவாகவே இருக்கிறது. நாங்கள் விவாகரத்து செய்ததாக தொடர்ந்து வதந்திகள் பரவுகின்றன. பலமுறை இதை மறுத்துள்ளேன். ஆனாலும் நிற்கவில்லை.
என்னை மட்டுமின்றி ஷில்பாஷெட்டி, மலைக்கா போன்ற வேறு சில இந்தி நடிகைகளும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வந்தன. ஆனால் அவர்கள் கணவன்மார்களுடன் சந்தோஷமாக வாழ்கிறார்கள். எனவே என்னைப்பற்றிய வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.