சும்மா பேசுறதையெல்லாம் செய்தியாக்கிட்டாங்களே என்று டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் கவலை தெரிவித்துள்ளார். கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு - த்ரிஷா நடித்த வெற்றிப்படம் "விண்ணைத்தாண்டி வருவாயா". சிம்புவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கவுதம்மேனன் இயக்கப்போவதாகவும், அதிலும் சிம்பு ஹீரோவாக நடிக்கப்போவதாகவும், நாயகியாக மதராசப்பட்டினம் ஏமி ஜாக்ஸன் நடிப்பார் என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது.
அந்த செய்தியை கவுதம் மேனன் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விண்ணைத்தாண்டி வருவாயா" இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை என்று கூறியிருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா என நாங்கள் ஆலோசித்து வந்தோம். அது ஒரு ஐடியாதான். முடிவல்ல. ஆனால் அதற்குள் செய்தி வந்து விட்டது. நிச்சயம் சிம்புவுடன் இணைந்து ஒரு படம் பண்ணும் திட்டம் உள்ளது. 2012 ஜூனில் இந்தப்படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளேன். அவருடன் பணியாற்றுவது சுவாரஸ்யமான அனுபவம். இந்தப் படம் குறித்து இருவரும் பேசிக் கொண்டுள்ளோம், என்று கவுதம் மேனன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.