யோகா நடிகைக்கும் தெலுங்கு நாக நடிகரின் மகனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக சில வாரங்கள் முன்பு தமிழ், தெலுங்கு திரையுலகம் பதறியது. ஊடகங்கள் இந்த செய்திக்கு அளவுக்கதிகமான முக்கியத்துவம் தந்தன.
பிறகு சம்பந்தப்பட்ட நடிகையும், நடிகரும் இந்தச் செய்தியை தனித்தனியே மறுத்த பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.
ஊடகத்தில் கொந்தளிப்பு அடங்கிவிட்டாலும் சம்பந்தப்பட்டவர்கள் கோபத்தில்தான் இருக்கிறார்கள். கூடவே மீண்டும் இப்படியொரு செய்தி வந்துவிடக் கூடாதே என்ற தவிப்பு.
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் நடிகையும், நடிகரும் நேருக்கு நேர் சந்தித்தனர். மேற்படி கிசுகிசு காரணமாக கண்டும் காணாதது போல் இருவரும் ஒதுங்கிச் சென்றனர். சம்பிரதாயத்துக்கு ஒரு ஹாய்கூட சொல்லிக் கொள்ளவில்லை.
ஒரு மோசமான கிசுகிசு ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப்பை கெடுத்துவிட்டதை என்னவென்று சொல்ல?
Thursday, 7 July 2011
ஒரு மோசமான கிசுகிசு ஒரு நல்ல ஃப்ரெண்ட்ஷிப்பை கெடுத்துவிட்டதை என்னவென்று சொல்ல?
Thursday, July 07, 2011