Monday, 4 July 2011
“ராணா” படத்தில் “ரஜினி நடிப்பது பற்றி டாக்டர்களிடம் ஆலோசிப்பேன்”:கே.எஸ்.ரவிக்குமார்
Monday, July 04, 2011
“ரஜினிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தற்போது பூரண குணமடைந்து அங்கேயே ஓய்வு எடுத்து வருகிறார். அவர் சென்னை திரும்பியதும் “ராணா” படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இது குறித்து அப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அளித்த பேட்டி வருமாறு:-
“ராணா” படத்தின் கதை 17-ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு அரசனை பற்றியது. ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் எல்லாம் இருக்கும். பெரிய போர்க்கள யுத்த காட்சி விஸ்தாரமான அரண்மனை, தர்பார் மண்டபம் போன்றவைகளும் இருக்கும். இதில் ரஜினிக்கு மூன்று வேடங்கள். ஒரு வேடம் காமெடி கேரக்டராக உருவாக்கப்பட்டு உள்ளது.
படத்தில் நான்கு முதல் ஐந்து நாயகிகள் இருப்பார்கள். அதில் தீபிகா முக்கிய நாயகியாக இருப்பார். ரஜினி உடல் நிலையை கருத்தில் கொண்டு “ராணா” கதையில் மாற்றம் செய்யவில்லை. அப்படி மாற்றுவதை ரஜினியும் விரும்பமாட்டார்.
இந்த கதை ரஜினியுடையது. முழு திரைக்கதையும் அவருக்கு தெரியும். படப்பிடிப்பு துவங்கியதும் ரஜினியால் எந்த அளவுக்கு சிரமம் எடுத்து நடிக்க முடியும் என்று பார்த்து அதன்படி முடிவு செய்வேன்.
டாக்டர்களிடமும் ஆலோசனை செய்வேன். குதிரை மீது ரஜினி பறப்பது போன்ற காட்சி வந்தால் அந்த இடத்தில் அவருக்கு பதில் வேறு யாரையாவது பயன்படுத்துவேன்.