
ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது. தேர்தலுக்கு பிறகு
எடுக்கப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதற்காகவும், ஆசி பெறவும் இன்று காலை முதல்வர் கலைஞரை சந்தித்தார் வடிவேலு.

விஜயகாந்தை தாக்கி பிரசாரம் செய்ததால் ராணா படத்தில் இருந்து நீங்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?
ராணாவாவது, கானாவாவது, எதில் இருந்து நீக்கினாலும் நான் கவலைப்படவில்லை. மே 13-ந் தேதி மக்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியும். அதன் பிறகு எல்லாம் மாறும்.