Thursday, May 19, 2011
நடிகை அக்ஷயாவை ஞாபகம் இருக்கிறதா..? ஆர்யா நடித்த கலாபக் காதலன் படத்தில்இ ஆர்யா மீது காதல் கொள்ளும் அவரது கொழுந்தியாளாக நடித்திருப்பாரே... அவரேதான். அவர் தற்போது உயர்திரு 420 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
பாடலாசிரியர் சினேகன் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் அல்ட்ரா மார்டன் பெண்ணாக நடித்திருக்கிறார் அக்ஷயா. கலாபக் காதலன் படத்திற்குப் பிறகு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அக்ஷயா ஏமாந்து போனார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் இவ்வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அக்ஷயாஇ திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார். கதாநாயகியாக மட்டுமின்றிஇ மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடிப்பேன். அதுமட்டுமின்றி கவர்ச்சிப் புயல் நமீதாவைப் போலஇ நானும் அதிரடி கவர்ச்சி காட்டி நடிக்கவும் தயராகி விட்டேன். இனிமேல் தமிழ் சினிமா இயக்குனர்கள்தான் என் நடிப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றிருக்கிறார்.
அடக்கி வாசிச்சா சினிமா வாய்ப்பு கிடைக்காது... அதிரடியா வாசிச்சாதான் சினிமா வாய்ப்பு கிடைக்கும்னு லேட்டா புரிஞ்சிகிட்டிருக்கார் அக்ஷயா. லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வருவாங்க போலும் பொறுத்திருந்து பார்ப்போம்.