

இந்தியாவில் விளம்பரம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் என்ற பெயரை அவர் தட்டிச்சென்று விட்டார். பல்வேறு விளம்பர படங்களில் நடித்தாலும், அவரது மனைவி சாக்ஷி இதுவரை நடித்ததில்லை. தற்போது அந்த குறையும் தீரப்போகிறது. டோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகிய இருவரையும் வைத்து விளம்பர படம் ஒன்று தயாரித்து தங்களது மார்க்கெட்டை மக்கள் மத்தியில் அதிகரிக்க பைக் நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளது. இதற்கு டோனி, சாக்ஷி ஆகியோர் சம்மதித்து விட்டனர்.
இந்த படத்தை ஐதராபாத்தை சேர்ந்த ராஜ் நிதிமோரு, கிருஷ்ணா ஆகியோர் தயாரிக்கிறார்கள். இதில் நடிக்க டோனியும், சாக்ஷியும் நேற்று மாலை ஐதராபாத் வந்தனர். அங்குள்ள ஓட்டலில் ஓய்வு எடுத்த அவர்கள் பின்னர் சூட்டிங் நடந்த இடத்திற்கு ரகசியமாக சென்றனர். அங்கு இருவரும் பைக் விளம்பரத்தில் நடித்தனர். இதுபற்றி படம் எடுத்தவர்கள் கூறும்போது டோனிக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால் அவரது மனைவி சாக்ஷி இதுவரை விளம்பரங்களில் எதுவும் நடித்ததில்லை. இருப்பினும் அவரது சிரித்த முகம் அனைவருக்கும் பிடிக்கும். எனவே இருவரையும் இணைத்து விளம்பர படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றன