Thursday, June 30, 2011
ஜீவன்-மேக்னா ஜோடியாக நடித்த படம் கிருஷ்ண லீலை. ஸெல்வன் இயக்கியுள்ளார். இப்படம் முடிந்து இரு வருடங்களுக்கு மேலாகியும் ரிலீசாகவில்லை. படத்தை வெளியிடக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக இயக்குனர் ஸெல்வன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
கிருஷ்ணலீலை படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. பின்னர் அப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம் நிறுவனத்துக்கு விற்று விட்டனர். படப்பிடிப்பு டப்பிங் பணிகள் முடிந்துள்ளது.
2 வருடங்கள் 3 மாதங்களுக்கு முன்பே 90 சதவீதம் வேலைகள் முடிந்து படம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இரு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பலமுறை அலைந்து விட்டேன். படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படம் வராததால் புதுப்பட வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை.
கிருஷ்ணலீலை ரிலீஸ் ஆன பிறகு பட வாய்ப்பு தருகிறோம் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதனால் பெற்றோர்களை வைத்துக் கொண்டு என்னால் குடும்பம் நடத்த இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வருமானமின்றி மிகவும் கஷ்டப்படுகிறேன்.
எனவே படத்தை ரிலீஸ் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வருகிற ஜூலை 5-ந்தேதி முதல் கவிதாலயா நிறுவனம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.