தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்தவர் நடிகர் நாகார்ஜூனா. அவரது மகன் நாக சைதன்யாவும் அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக பிறந்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால் கலை வாழ்வில் அப்பாவின் பெயரை காப்பாற்றிய மகன், கல்யாண வாழ்வில் அப்பாவையே மிஞ்சிவிடுவார் போலிருக்கிறது. மகன் செய்திருக்கும் வேலை தென்னக சினிமாவையே ஒரு உலுக்கு உலுக்கும் போலிருக்கிறது.
தமிழ் சினிமா நாயகர்கள் சிலர் அனுஷ்காவுக்கு வலை விரித்து கொஞ்சம் சினிமாவிலாவது ஜோடி போட்டு டூயட் பாடுவது போன்ற கனவு கண்டு கொண்டிருக்க கடந்த வாரத்தில் நாக சைதன்யாவுக்கும் - அனுஷ்காவுக்கும் நிச்சயதார்த்தமே நடந்து முடிந்து விட்டதாக கிசுகிசுக்கிறார்கள். இந்த செய்தியால் தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகமும் வாயடைத்துப் போய் இருக்கிறது. இதனிடையே இந்த செய்திக்கு அனுஷ்கா தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுஷ்காவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கிட்டத்தட்ட 10 வயது வித்தியாசமாம். இப்படி இருக்கையில் அவர் எப்படி நாக சைதன்யாவை திருமணம் செய்ய முடியும் என்கிறது அனஷ்கா தரப்பு. |