

தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களில் நடிக்காதது ஏன்? என்பது குறித்து பாவனா விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
தமிழில் நான் கடைசியாக நடத்த படம் அசல். அப்படத்துக்கு பின் நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் கதை பிடிக்கவில்லை. ஆனாலும் தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.
நல்ல கதையும் கேரக்டரும் அமைந்தால் மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பேன். மலையாளத்தில் குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கிறேன். ஆபாசமாக நடிப்பது இல்லை என்று முடிவு எடுத்துள்ளேன்.
அது போன்ற கதையம்சம் உள்ள படங்களை உதறிவிட்டேன் என்றார்.