

நான் எப்போதும் அரசியலை விரும்பியதில்லை. இதை முன்பே தெளிவுபடுத்தி விட்டேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு சமுதாயத்திற்கு நல்லது செய்ய நினைக்கிறேன்.
ஏற்கனவே வழிகாட்டி என்ற அமைப்பை தொடங்கி பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் போதை விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறேன். எங்கள் வேண்டுகோளை ஏற்று கேரளாவில் குடித்து விட்டு அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்களை போலீசார் கைது செய்கின்றனர். அதேபோன்று தமிழக அரசும் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர் கூறும் போது, தற்போதைய சூழ்நிலையில் தமிழ்படம் எதுவும் கைவசம் இல்லை. மலையாள படங்களில் நடித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.