Tuesday, June 28, 2011
ஊரில் இருந்தாலும், வெளியூர் பறந்தாலும்... எப்போதும் செய்தியின் நாயகிதான்... த்ரிஷா. தமிழுக்கும் தெலுங்குக்கும் பறந்து திரியும் த்ரிஷாவுடன் சினி மினி மீட்டிங்... ஜாலியா மங்காத்தா ஷூட்டிங் முடிஞ்சது. விண்ணைத் தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு மாதிரி எனக்கு இந்தப் படத்தில் வெயிட்டான கேரக்டர் இல்லைதான். ஆனா, அஜீத்துக்காக ஹீரோயினா நடிக்கச் சம்மதிச்சேன். ஆக்சுவலி, அஜீத் பிரியாணி சமைச்ச அன்னிக்கு நான் ஸ்பாட்டில் இல்லை. விஷயம் கேள்விப்பட்டு, அவர்கிட்ட செல்லமாக் கோபிச்சுக்கிட்டேன். ஒரு ரகசியம் சொல்லவா? அஜீத்துக்கு பிரியாணி மாதிரி, சிக்கன் பீட்ஸாவும் சூப்பரா செய்யத் தெரியும். ஹைய்யோ... ஷாலினி கொடுத்துவெச்சவங்க!