Wednesday, 20 July 2011
மீண்டும் குடும்ப பந்தத்தில் சிக்க மாட்டேன்: 2-ம் திருமணத்தில் விருப்பம் இல்லை; சோனியா அகர்வால் விரக்தி.
Wednesday, July 20, 2011
சோனியா அகர்வாலும் இயக்குனர் செல்வராகவனும் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். செல்வ ராகவனுக்கு மீண்டும் திருமணம் நடந்துள்ளது. சோனியா அகர்வால் திரும்பவும் சினிமாவுக்கு வந்துள்ளார்.
ராஜ்கிருஷ்ணா இயக்கும் ஒரு நடிகையின் வாக்குமூலம் மற்றும் மாதா பிதா குரு படங்களில் நடித்து வருகிறார். செல்வராகவனைப் போல சோனியா அகர் வாலும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் அடிபடுகின்றன.
இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளேன். 2-ம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளேன் என்பது உண்மையல்ல. அதுபோன்ற இன்னொரு உறவில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. குடும்ப பந்தத்தில் ஈடுபடவும் ஆர்வம் இல்லை. நடிப்பில் கவனம் செலுத்துகிறேன்.
செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்க அழைத்தால் கூட கதை பிடித்து இருந்தால் ஒப்புக்கொள்வேன். அது தொழில் ரீதியான தொடர் பாகவே இருக்கும். வில்லி வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அதுதான் சவாலானதாக இருக்கும்.
ஒரு நடிகையின் வாக்கு மூலம் படத்தின் கதை எனது சொந்த கதையல்ல. ஒவ்வொரு நடிகைகள் வாழ்விலும் நடந்த சிறுசிறு சம்பவங்களை அப்படத்தின் கதை தொட்டுச் செல்லும். இயக்குனர் ராஜ்கிருஷ்ணா கதை சொன்னபோதே ரொம்பவும் பிடித்தது. உடனே ஒப்புக் கொண்டேன்.
இவ்வாறு சோனியா அகர்வால் கூறினார்.