Wednesday, July 06, 2011
நடிகை ஸ்ரேயா புதிதாக நடித்து வரும் ஆங்கில படத்திற்கு "மிட்நைட் சில்ரன்" என்று பெயரிட்டுள்ளனர். சல்மான் ருஷ்டியின் நாவலான மிட்நைட் சில்ரன் கதையின் தழுவல்தான் இந்த படம். மிட்நைட் சில்ரனை இயக்குபவர் டைரக்டர் தீபா மேத்தா. இந்த படத்தில் நடிப்பது பற்றி நடிகை ஸ்ரேயா அளித்துள்ள பேட்டியில், மிட்நைட் சில்ரன் படத்தில் என் நடிப்பை கண்டு எல்லாரும் வியப்பார்கள். இந்த படத்தில் குடிசைப் பகுதிப் பெண்ணாக நடித்துள்ளேன். என் உடை, மேனரிசம், நடிப்பு எல்லாமே இதுவரை பார்த்திராததாக இருக்கும். வழக்கமாக கிளாமர் ஸ்ரேயாவைதான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதில் என் நடிப்பை பார்த்துக் கண்டிப்பாக வியப்பார்கள். நான் எந்த படத்தில் நடித்தாலும் அதில் நூறு சதவிகித உழைப்பை கொடுக்கிறேன். சினிமாவை பொறுத்தவரை கேரக்டரை பொறுத்துதான் நடிப்பு பேசப்படும். தமிழில் சிறந்த இயக்குநர்களோடு பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்க ஆவலாக, அந்த சந்தர்ப்பத்துக்கு காத்திருக்கிறேன், என்று கூறியுள்ளார். சப்புன்னு போச்சே...!