அதற்கு பதில் அளித்துள்ள கத்ரீனா, ரொம்பவே கோபமாக பேசியிருக்கிறார். கத்ரீனா தன் பேட்டியில், நான் பாதி இந்தியர் என்று பிறர் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கின்றனர். இந்த உலகத்தில் என்னைப் போன்று பாதி இந்தியர்கள் பலர் உள்ளனர். இந்திய நியூஸ் சேனல்கள் எனது பாஸ்போர்ட் நகலை வைத்துள்ளன. அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்று கேட்காதீர்கள். என் பாஸ்போர்டில் எனது தாயின் பெயர் உள்ளது. எனது பிறந்த நாள், பிறப்பிடத்தை என்றைக்குமே மறைத்ததில்லை. நான் ஹாங்காங்கில் பிறந்தேன். இந்த தகவலை தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டும். நான் பாதி இந்தியர், பாதி ஐரோப்பியர் என்பதற்காக வெட்கப்படத் தேவையில்லை, என்று கூறியுள்ளார். |