கடும் விரக்தியிலிருக்கிறார் சிம்பு. இல்லையென்றால் பிலிம்பேர் விருது நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை ட்விட்டரில் கொட்டி தீர்த்திருப்பாரா?
எந்த பத்திரிகை தர்மத்திலும் அடங்காத விதியை பின்பற்றி வருகிறது மேற்படி பத்திரிகை. எப்படி தெரியுமா? இப்பத்திரிகையின் சென்னை பதிப்புக்கு தங்கதுரை என்பவர்தான் பொறுப்பாசிரியர். இவரது மெயின் தொழில் கால்ஷீட் பார்ப்பது. உபதொழில்தான் பிலிம்பேர்! தான் கால்ஷீட் பார்க்கும் நட்சத்திரங்களை மிக சரியாக விருது பட்டியலில் நுழைத்துவிடுவது இவரது முக்கிய பணி. இதற்காகவே இவரை தனக்கு கால்ஷீட் பார்க்க வைக்கும் நட்சத்திரங்களும் உண்டு. சூர்யா, கார்த்தி, தனுஷ், தமன்னா, என்று முன்னணி நட்சத்திரங்கள் இவரது பாக்கெட்டில்தான். இதில் தப்பித்தவர் சிம்பு மட்டும்தான். அதனால்தான் தனக்கு பிலிம்பேர் விருது கிடைக்கவில்லையோ என்று கருதுகிறார் அவர்.
விஜய் டிவி- பிலிம் பேர் விருதுகளா அல்லது மகேந்திரன் - தங்கதுரை விருதுகளா என்றே தெரியவில்லை என்று நேரடியாக பட்டாசை கொளுத்தி முகத்தில் போட்டிருக்கிறார் சிம்பு. இவர் சொல்லியிருக்கும் மகேந்திரன், விஜய் தொலைக்காட்சியின் முக்கியமான அதிகாரிகளில் ஒருவர்.
Wednesday, 6 July 2011
கடும் விரக்தியிலிருக்கிறார் சிம்பு.
Wednesday, July 06, 2011