தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் பிரசாரம் செய்ய அமெரிக்க அதிபர் பராக் ஓபாமா வருகிறார் என்றால் குபீர் என சிரிப்பு வருகிறதல்லவா? அந்த சிரிப்பான கான்செப்ட்டை வைத்து ஒரு படத்தை எடுத்து வருகிறார்கள். தேசிய விருது பெற்ற இயக்குனரான ஜானகி விஸ்வநாதன் இயக்கும் புதிய படத்தில்தான் இந்த கூத்து. ஓம் ஓபாமா என்ற பெயரில் உருவாகவிருக்கும் இப்படத்திடனை ஸ்ருதிகா பவுண்டேஷன் தயாரிக்கிறது.
கோடாரபாளையம் என்ற ஊரை சேர்ந்த இரு அரசியல்வாதிகள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இவர்களின் தேர்தல் பிரசாரத்திற்காக அமெரிக்க அதிபர் ஓபாமா வருவதாக செய்தி பரவுகிறது. இதை நம்பும் மக்கள் ஒபாமாவுக்காக யாகம் பூஜை என அமர்க்களப்படுத்துகிறார்கள். பஞ்சாயத்து, தேர்தல் பிரசாரம், அரசியல் மோதல், காதல், ஊரின் நிதி நிலை, ஊடக ஆதிக்கம், மூட நம்பிக்கை போன்றவற்றுக்கு ஒரே முடிவாக அமைகிறது ஒபமாவின் வருகை என நீளுகிறதாம் "ஓம் ஓபாமா" படத்தின் கதை.ஓபாமா வருவதெல்லாம் சரி... அந்த மேட்டர் ஓபாமாவுக்கு தெரியுமா?