"களவாணி" படத்தின் இயக்குநர் சற்குணத்தின் இயக்கத்தில் 2வதாக உருவாகி இருக்கும் "வாகைசூட வா" படத்திற்காக நிச்சியம் விருதுகள் பல கிடைக்கும் என்று கோடம்பாக்கமே எதிர்பார்ப்பதால், இயக்குநர் சற்குணம் ஒரு புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார். அது நாயகி இனியாவிற்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் உமா வாய்ஸ் கொடுத்திருந்தாலும் மற்றொரு பக்கம் தமிழ் நன்கு தெரிந்த இனியாவின் சொந்த குரலிலும் ஒரு டப்பிங் பதிவு நடத்தியிருப்பதுதான்.
தேசிய விருது உள்ளிட்ட பெரிய விருதுகளுக்கு படத்தை அனுப்பும்போது, அப்பட நட்சத்திரங்கள் சொந்த குரலில் பேசி இருக்க வேண்டும்... எனும் விதிமுறை இருப்பது தான் காரணம். இதற்காக இப்பட ஆடியோ விழாவிற்கு சமீபத்தில் கேரளாவில் இருந்து சென்னை வந்த இனியா மூன்று நாட்கள் சென்னையில் டேரா போட்டு டப்பிங் பேசி வருகிறார் என்றால் பாருங்களேன்!