Monday, July 18, 2011
ஒரு தலை ராகம் வந்து முப்பது வருஷம் ஆகிடுச்சு. இப்போ மறுபடியும் "ஒரு தலை காதல்'. என் படங்கள் எப்போதும் யாருக்கும் மறக்க முடியாத அனுபவம். அதனால்தான் இதையும் அனுபவிச்சு எடுக்குறேன்.
என் படங்கள் எல்லாமும் பேசியிருக்கு. அன்பு சொல்லி நெகிழ வெச்சிருக்கு. காதல் சொல்லி கிறங்க வெச்சிருக்கு. பாசம் தந்து பாராட்டு வாங்கியிருக்கு. அதனால் இப்ப மறுபடியும் காதலுக்கு வர்றேன். காதல் சினிமாக்களில் என்னைப் பார்த்த ரசிகன், அப்படியே மீண்டும் என்னை அண்ணாந்து பார்ப்பான். நான்தான் ஹீரோ. இதே தாடிதான். வட இந்திய பொண்ணு ஹீரோயின். பெரிய நடிகர், நடிகைகள் பட்டாளமே நடிக்குது. இப்போ இருக்குற எல்லா திறமையான இயக்குநர்களுக்கும் டி.ஆர். சவால் விடுறான். நீங்கள் இதுவரை பார்க்காத, யோசிக்காத படம் இது.