Sunday, 10 July 2011
தடையற தாக்க நாயகி பிரச்சனை ஓய்ந்தது.
Sunday, July 10, 2011
அருண்விஜய் “தடையற தாக்க” என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இந்தி நடிகை பிராச்சி தேசாயை ஒப்பந்தம் செய்தனர். இதற்காக பெரும் தொகையே அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு படப்பிடிப்புக்காக சென்னை வந்த அவர் ஒருநாள் தங்கி இருந்து விட்டு . மறுநாள் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி மும்பைக்கு பறந்து விட்டார்.
இதனால் படப்பிடிப்பு நின்று போனது. தயாரிப்பாளரும், இயக்குனரும் பலதடவை அவரை தொடர்பு கொள்ள முயன்றும் ஒரு பதிலும் பிராச்சிடமிருந்து வரவில்லை இதனால் ஆவேசம் அடைந்த படத்தின் காதாநாயகன் போட்ட செட்களை எல்லாம் கலைத்தோம். இதர நடிகர், நடிகைகளின் கால்ஷீட்களிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன,அவர் படத்தில் நடிக்காததற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று பிராச்சிதேசாய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இவ்வாறு பிராச்சி பிரசனை ஒருபக்கம் இருந்து வரும் நிலையில் தற்போது அவருக்குப் பதில் புதிய நாயகியை கண்டுபிடித்துள்ளனர். அவர் மமதா மோகன்தாஸ்.முதலில் இவரைத்தான் நாயகியாக்குவது குறித்து யோசித்துள்ளனர். பின்னர்தான் பிராச்சி பக்கம் திரும்பினார்கள். தற்போது பிராச்சி பிரச்சினையாகவே மீண்டும் மம்தாவை நாடியுள்ளனராம்.
இப்படத்தில் பெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்ற ராகுல்ப்ரீத் சிங்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.நாயகனாக அருண் விஜய் நடிக்கிறார். திங்கள்கிழமையன்று மம்தா மோகன்தாஸ் படப்பிடிப்பில பங்கேற்பார் என தெரிகின்றது.
இனி மேல் என்ன “தடையற தாக்க” தடை இல்லாமல் படப்பிடிப்பு நடத்த வேண்டியது தானே