Sunday, July 10, 2011
ஒவ்வொருவருக்கும் ஒரு சென்டிமென்ட் இருக்கும். காஜல் அகர்வாலுக்கு வெள்ளைதான் சென்டிமென்ட் கலராம். எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் அப்போது வெள்ளை நிறம் இருப்பது போலப் பார்த்துக் கொள்வாராம் காஜல். எந்தப் படத்தின் ஷூட்டிங்காக இருந்தாலும் முதல் காட்சியின்போது வெள்ளை நிற சுடிதாரில்தான் வருவாராம். அப்போதுதான் அந்தப் படம் சிறப்பாக ஓடி பெரும் வெற்றி பெறும் என்பது அவரது நம்பிக்கை. |
தமிழிலும், தெலுங்கிலும் உலா வந்த காஜல் அகர்வால் தற்போது இந்தியிலும் தனது கலைச் சேவையை விரிவுபடுத்தியுள்ளார். தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சிங்கம் படத்தை அதே பெயரில் அஜய் தேவ்கன் நடிக்க ரீமேக் செய்துள்ளனர். தமிழில் அனுஷ்கா நடித்த வேடத்தில் காஜல் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கின்போதும் கூட முதல் காட்சியில் வெள்ளை நிற சல்வார் கமீஸ் அணிந்துதான் நடித்தாராம் காஜல். சரி, பாலிவுட் விஜயம் எப்படி இருக்கிறது என்று கேட்டால், நீண்ட நாள் காத்திருப்பு இது. இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது. இருப்பினும் காத்திருப்பு வீணாகவில்லை. அருமையான கதை, அட்டகாசமான படம். எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது என்றார் காஜல். எல்லாவற்றிலும் வெள்ளை இருப்பது பார்த்துக் கொள்ளும் காஜல், சம்பளத்தையும் வெள்ளையாகத்தானே வாங்குறீங்க..? |